நவீன அரசாங்கத்தார்

பெற்றுவிட்டோம் சுதந்திரம் என
பெருமைக் கொள்ள வேண்டாம்
பெரியதாய் மாறும் உலகிற்கு
உரியதாய் மாற நாமும்
எழுச்சிக் கொள்ள வேண்டுமே

குறுகிய மனம் கொண்டு
குவலயம் சொந்தம் என்றால்
கூறு இல்லா உயிரினமும்
குவித்து எச்சிலை உமிழுமே
குற்றத்தால் மனம் கோணுமே

உழைத்துக் களைத்த மனிதர்களின்
உதிர அடர்வு தன்மையினால்
உயர்ந்த அறிவு மங்குமே
உணர்வுகளின் வேகம் கூடுமே
உரிமையை கேட்பது குறையுமே

உணர்வைத் தூண்டும் நபர்களின்
உற்சாகப் பேச்சை நம்பியே
அவர்களை உயர்த்திடவே இவர்கள் துணியுவர்
உள்ளொன்று வைத்து புறம்பேசும்
உத்தமர்களே அரசை நடத்துவர்
- - - - -நன்னாடன்

எழுதியவர் : நன்னாடன் (23-Dec-19, 9:14 am)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 55

மேலே