நாஞ்சில் நாடனின் நெஞ்சில்

குடியுரிமை இல்லாமலேயே
பழகியவர் மனதில் எளிதில்
குடியேறி விடுவான்...
முகம்நக நட்பதோடு
அகம்நக நட்பதிலும்
சிறந்த நண்பன்... பரதன்...

விரைவு இவன்
பேச்சில் மட்டுமல்ல
செயலிலும்தான்.. ஆனாலும்...
மித வேகத்தாருடனும்
இணைந்து இயைந்து செல்லும்
வித்தை தெரிந்தவன்...

நாஞ்சில் நாடன்
என்றாலும் எல்லா
நண்பர்களுக்கும் இவன்
நெஞ்சில் இடம் இருக்கும்..

நெல்லை அரசு
பொறியியல் கல்லூரி
பொருநை இல்ல விடுதி
முதல் தளத்தில்
தங்கியிருந்த இவன்
ஒவ்வொரு முறையும்
இரண்டாம் தளம் ஏறி இறங்கி
கல்லூரி செல்வான் நண்பர்களோடு..
அன்று அவன் கால் வலித்தது..
ஆனால் நட்பு செழித்தது...
நினைக்க நினைக்க
இன்றும் மனசு இனிக்குது...

அரசியல்... சினிமா
ஆரியம்... திராவிடம்
இலக்கணம்.. இலக்கியம்..
பொருளாதாரம்.. வாழ்வாதாரம்..
இன்னும் பல...
அனைத்திலும் செய்வான் விவாதம்
அதெல்லாம் மிக அபாரம்..

முப்பத்து மூன்று ஆண்டு
ஆசிரியத் தொழிலில்
நேரடியாய் இவனிடம்
படித்து பணியிலிருப்பர்
பூமியின் சுற்றளவில்
பத்து மைலுக்கு
ஒரு மாணவர் வீதம்...
இது குறைந்தபட்சம்..
வேறென்ன வேண்டும்
இதைவிட அதிகபட்சம்...

இதிகாச பரதனால்
அழகு பெற்றது
ராமாயண காவியம்...
ஜிஸிஇ பரதனால்
அழகு பெறுகிறது
நட்பெனும் ஓவியம்...

அபிநயங்கள் இருப்பது
பரதக் கலையில் மட்டுமல்ல
பரதனின் குரலில்..
செயலில்.. கேசத்திலும்தான்..

பரதன்...
எனது மொத்த நண்பர்களின்
'டாப் டென்' பட்டியலில்
நீ இருக்கிறாய்....
நான் குறைந்தபட்சம்
உனது கல்லூரி நண்பர்களின்
'டாப் டென்' பட்டியலிலாவது
இருப்பேன் என நம்புகிறேன்...

உலக உயரமும் அதில்
தனது உயரமும் தெளிவாகத்
தெரிந்தவர்களில் நீயும் ஒருவன்...

மார்கழி மாதத்து பனியும்
தணித்து விடாது இவனது
விவாதத்தின் சூட்டை...
சித்திரை மாதத்து வெயிலும்
உலர்த்தி விடாது இவனது
இதயத்தின் குளிர்வை...

உன்னைத் தெரியா
மூன்றாமவருக்கு உன்னிடம்
பழகுவதற்கு முன் உனது
வாதத்தில் முட்கள்
இருப்பதாய்த் தெரியும்...
பழகிய பின்னர்தானே தெரியும்
உனது இதயத்தில் இருப்பது
ரோஜாக்கள் என்று...

திருப்பாவை... திருவெம்பாவை
பாடும் மாதம் இது...
வானமும் வசந்தமும் என்றும்
இருக்கும் உன்னோடு...

பரதன்... ஆரோக்கியம்
முதன்மையாய்க் கொண்டு
வாழ்க பல்லாண்டு...
வளங்கள் எல்லாம் பெற்று...
எனதினிய பிறந்தநாள்
நல் வாழ்த்துக்கள்...

நட்புடன்...
அன்பன் ஆர். சுந்தரராஜன்.
😀🙋🏻‍♂👍🙏🎂🍰🌹🌷🌺

எழுதியவர் : சுந்தரராஜன் ராஜகோபால் (24-Dec-19, 2:31 pm)
சேர்த்தது : இரா சுந்தரராஜன்
பார்வை : 156

மேலே