முருகானந்தம் அவன் அழகானந்தம்

உலகியல் தெரிந்தவன்...
அழகியல் அறிந்தவன்...
அதிர்வுகளில் அதிராதவன்...
நட்பினை ஆராதிப்பவன்...
அவன்... நண்பன் முருகானந்தம்...
இவன் வாழ்வில் என்றும்
இருக்கட்டும் பேரானந்தம்...

சுருளான கேசம்
சுருளாத நேசம்
இவன் மனம் விசாலம்
இதுவே இவனது விலாசம்...

முருகானந்தம்.. ஒரு அழகானந்தம்..
இந்த சிற்பம் தன்னைச்
செதுக்கிய சிற்பிகளோடு
சேர்ந்து தானும் தன்னைச்
அழகாய்ச் செதுக்கிக் கொண்டது
எல்லோரும் விரும்பும் வண்ணம்...

நண்பன் முருகானந்தம்...
பயணிக்கும் உன்
வாழ்வின் பாதை எங்கும்
வசந்தங்கள் வரமாகும்...
வளங்கள் வசமாகும்...

நண்பனே... ஆரோக்கியம்
முதன்மையாய்க் கொண்டு
வாழ்க பல்லாண்டு
வளங்கள் எல்லாம் பெற்று..
இனிய பிறந்தநாள்
நல் வாழ்த்துக்கள்...
👍🙏🌹🙋🏻‍♂🤝

எழுதியவர் : சுந்தரராஜன் ராஜகோபால் (24-Dec-19, 5:06 am)
சேர்த்தது : இரா சுந்தரராஜன்
பார்வை : 83

மேலே