மாய நதி
தொடர்ந்து வரும்
தொடர் கதை ஒன்று..
அத்தியாயங்கள் அதில் பல...
சமீபத்திய அத்தியாயங்களில்
கதை நாயகிகள் மத்திய
வயதுப் பருவம்... இருந்தும்
ஆரம்ப அத்தியாயங்களின்
அழகிய இளமைத் தோற்றம்
நினைவில் வரத்தான் செய்கிறது...
இதுவரை பார்க்காத
ஐஸ்வர்யா ராய்கள்..
பிரியங்கா சோப்ராக்கள்..
திரிஷாக்கள்... நயன்தாராக்கள்..
இப்போதுதான் பார்வை
ஜன்னலில் வரும் போதெல்லாம்
இப்போதைய தோற்றம்
மட்டும்தான் தெரிகிறது...
நினைவு நாடாக்கள்
அழகிய நண்பர்களின்
ஆரம்பத் தோற்றங்களை
மனதில் அள்ளித்தரும் போதெல்லாம்...
நமது தோற்றமும் நினைவில் வர
மனதில் இளமை
திரும்பவும் திரும்புகிறது...
அதையே மனம் விரும்புகிறது...
குழு வாட்ஸ்அப்
அடையாளப் படம்...
முத்து முத்தாய் மூன்று முகங்கள்...
இளந் தளிர்களாய்...
கல்லூரி மகளிராய்...
மூவரில் இருவர்
குட்டி மானென
குழந்தைப் பார்வை..
மயில்களின் சாயல்..
மண்பார்த்த நடை...
அது அழகு... அற்புதம்...
இவர்களுக்கு இசையழகு
மொழியில் வந்தது...
நடையழகில் கோஎஜுகேஷன்
சூழல் தெரிந்தது...
மூவரில் ஒருவர்...
ஜான்சி ராணி இலட்சுமி பாய்...
இவரைக் கண்டு அதிசயிப்பர்
பொறியியற் கல்லூரி பாய்ஸ்...
இவருக்கு மண் பார்த்து
நடக்கவும் தெரியும்...
விண் பார்த்து
ரசிக்கவும் தெரியும்...
அது... அழகு... ஆச்சரியம்...
ஒரு முகம் கூறுகிறது...
ஆணென்ன பெண்ணென்ன
நீயென்ன நானென்ன
எல்லாம் ஓரினம்தான்...
இன்னொரு முகம்
இனிதாய்ப் பாடுகிறது...
சிட்டுக் குருவி முத்தம் கொடுத்து
சேர்ந்திடக் கண்டேனே...
மூன்றாம் முகம்...
பறவையைக் கண்டான்
விமானம் படைத்தான் பாடுகிறது..
ஆகாயத்திற்கும் அப்பால்
அதிசயம் தேடுகிறது...
ஆண் பெண் சமத்துவ
சங்கீதம் இசைக்கிறது...
மாய நதியொன்று
ஜீவ நதியாய்...
பொருநை ஆறாய்
அழகிய நட்பாய்...
அறிவுப் பெண்களின் மனங்களில்
ஆண்டுகள் முப்பத்தாறு
தாண்டியும்... தென்றலின்
கைபிடித்து இனிய
வாழ்க்கை நந்தவனத்தில்
நடந்து போகட்டும்... அதில்
வானமும் வசந்தமும்
வசப்படட்டும்.. வாழ்த்துக்கள்...
😀👍💐👏