சுவடுகள் - வடுக்களாக

கண்டோம் !

அன்று புன்னைகை உதிர,

திரண்டு வந்து !

உள்ளங்கால் தொட்டு உச்சிகுளிர செய்ததை,

மெய் மறந்தோம், உனது . . . அழகான

அரவணைப்பில்.!

காண்கிறோம் இன்று !

புன்னகையான சுவடுகளை மறைத்து ...

கண்ணீரை வடுக்களாக விட்டு சென்றதை...!

அணைத்து அரவணைத்து ...

எங்கள் உறவுகளை உயிரோடு இழுத்து சென்றாய் ...!

காலம் பல கடந்தாலும், உன்னை காண்கிறோம்

கண்களில் கண்ணீர் உதிர !

எழுதியவர் : முகம்மது உதுமான் (26-Dec-19, 1:49 pm)
சேர்த்தது : முஹம்மது உதுமான்
Tanglish : kadal
பார்வை : 107

மேலே