நான் அரசியலுக்கு வர்றது உறுதி

டேய் முருகய்யா, அங்க போறவன் யாருடா?
@@@@@@
எதுக்குடா கேக்கற?
@@@@@
படிச்சவன் மாதிரி இருக்கறான். மாப்பிள்ளை மாதிரி பட்டு வேட்டி, பட்டுச்சட்டை போட்டுட்டு இருக்கிறான். அவன்பாட்டுக்கு எதோ பேசிட்டு போறான். “நான் அரசியலுக்கு வர்றது உறுதி. எனது அரசியல் ஆன்மீக அரசியல், எங் கல்யாணம் முடியட்டும், நான் அரசியலுக்கு வர்றது உறுதி. என்னை எந்தக் கொம்பனும் தடுக்கமுடியாது’’ன்னு சொல்லிட்டு போறான், என்னடா ஆச்சு அவனுக்கு?
@@@@@@@@
பாவம்டா அவன். எங்கூடப் படிச்சவன். பேரு ஞானகுரு, அவனோட அப்பா சென்னையில பெரிய கோடீஸ்வரர். அவனோட கனவு அரசியில் கட்சி ஒன்னுல சேந்து மக்களுக்குச் சேவை பண்ணி முதலமைச்சர் ஆகணும். அவுங்க வீட்டில அவனுக்கு பல முட்டுக்கு கட்டைங்களப் போட்டு தடுத்துட்டாங்க. அவங் குடும்பம் பக்தி நெறைஞ்ச குடும்பம். கும்பாபிஷேகம் எங்க நடந்தாலும் குடும்பத்தோட போயி கலந்துக்குவாங்க. யாரு நிதி உதவி கேட்டாலும் வாரிக் குடுக்கற கும்பம். அந்த ஞானகுருவும் பக்தி உள்ளவன். ஆன்மீகவாதி. அவன ”அரசியல் சாக்கடையில் விழக்கூடாது”ன்னு அவனோட அம்மா, அப்பா கண்டிச்சாங்க;. அவனது கனவு நொறுங்கிப் போனதால அவ்னுடைய மனநிலை பாதிச்சுருச்சு. எப்பப் பாத்தாலும் “ நான் அரசியலுக்கு வர்றது உறுதி”ன்னு சொல்லிட்டு திரிய ஆரம்பிச்சுட்டான். மனநல மருத்துவர் அவனப் பரிசோச்சு பாத்துட்டு அவனை அரசியல் கனவை நிறைவேத்துவது அவனைச் சரியாக்கும்னு சொல்லிட்டாரு. அவனோட பெற்றோர்கள் சில காரணங்களால் அரசியலை வெறுக்கறவங்க. அவுங்கோள பிடிவாதத்தால ஞானகுரு இந்த நிலைக்கு ஆளாகிட்டான்,
@@@@@@
அவுங்க கொஞ்சம் விட்டுக்குடுத்துப் போயிருக்கலாம்.
@@@@@@@
அவனோட தாத்தாவின் அரசியலால சீரழிஞ்ச குடும்பம். ஞானகுரு அப்பா கடுமையா உழைச்சு சீரழிஞ்ச குடும்பத்தைச் சரியாக்கி கோடீஸ்வரர் ஆனவரு. அதானாலதான் அவன அரசியல் பக்கம் விடல. அவனுக்கு கல்யாணம் பண்ணி வச்சா அவன் சரியாகிடுவான்னு கல்யாண ஏற்பாட்டைப் பண்ணினாங்க, தாலி கட்டற நேர்த்தில தாலியை எடுத்து மூணு சுத்து சுத்தி “நான் அரசியலுக்கு வர்றது உறுதி. என்னோட அரசியல் ஆன்மீக அரசியல்”ன்னு சொல்லி கல்யாண மண்டபமே எதிரொலிக்கற மாதிரி கத்தினான். பொண்ணு, பொண்ணு வீட்டுக்காரங்க, வந்த உறவினார்கள் எல்லாம் ஞானகுருவோட பெற்றோரைக் கண்டபடி திட்டிட்டே மண்டபத்தைவிட்டு வெளியேறிட்டாங்க. பாவம்டா ஞானகுரு. தங்கமான பையன். சொத்து பத்து இருந்தும் அவன் வாழ்க்கை சீரழிஞ்சு போச்சுடா;.
@@@@@@@@@@
ஞானகுருவொட நிலையைக் கேட்டு எனக்கே கண் கலங்குதடா.

எழுதியவர் : மலர் (28-Dec-19, 3:02 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 119

மேலே