டுக்டே

என்னடா மச்சான் யோசனையில இருக்குற?
@@@@@
ஒண்ணும் இல்லடா. பையனுக்கு என்ன பேரு வைக்கிறதுன்னா சிந்திச்சுட்டு இருக்கிறேன. நம்ம ஊருல யாரும் அவுங்க பையனுக்கு வைக்காத புதுமையான இந்திப் பேரா வைக்கணும். இந்திக்காரங்க பெண் கொழந்தைங்களுக்கு 'கொடி' (லதா)ன்னெல்லாம் பேரு வைக்கிறாங்க. அர்த்தம் இல்லாத சொற்களை உருவாக்கி அதைப் பேரா வைக்கிறாங்க. நம்ம ஆட்களும் அந்தக் கலாச்சாரத்தை பின்பற்ற ஆரம்பிச்சிட்டாங்க. (பூவிஷா, நிவிஷ்). நீ தான் தினம் ஆங்கில செய்திதாள்களைப் படிக்கிறவனாச்சே, நீ பாத்த இந்திச் சொல் எதையாவது சொல்லு. அதையே எம் பையனுக்கு பேரா வச்சிடலாம்.
###########
இன்னிக்கு டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ்ல ஒரு இந்தி வார்த்தையைப் பார்த்தேன். அதையே உம் பையனுக்கு பேரா வச்சிடுடா மச்சான். இந்தியாவில யாரும் அந்த வார்த்தையைப் பேரா வச்சிருக்கமாட்டாங்கடா.
@@@@@@@
சீக்கிரம் சொல்லுடா மச்சான்.
@@@@@
'டுக்டே' (Tukde)
@@@###
பேரு ரொம்ப புதுமையா இருக்குதடா. 'டுக்டே, டுக்டே, டுக்டே'.
@@@@@@
இந்தப் பேர காதில கேக்கறவங்க எல்லாம் 'சுவீட் நேம்'னு சொல்லுவாங்கடா.
@@####
ரொம்ப நன்றிடா மச்சான்.
■■■◆◆◆◆◆■◆◆◆■◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
Tukde = piece
◆◆◆◆●◆◆◆◆●◆●●◆●●●◆●●●●●◆◆●◆●●
இந்திப் பெயர் மோகம்
தமிழர்களின் தீராத தாகம்!

எழுதியவர் : மலர் (27-Dec-19, 11:40 pm)
பார்வை : 106

மேலே