தமிழ் வணக்கம்

என் உமிழ் நீரும்
தமிழராய் சுரக்க வேண்டும்

தமிழின் புகழ் உலகெங்கும்
கொடிகட்டிப் பறக்க வேண்டும்

தமிழ் தமிழ் என்றே
இனி குழந்தைகள்
பிறக்க வேண்டும்

தமிழைத் தவிர
மற்ற மொழிகளை நான் மறக்க வேண்டும்

தமிழ் என்றால்
மூடிய கதவுகள்
திறக்க வேண்டும்

தமிழைத் தவிர அனைத்து சொத்துக்களையும் நான் துறக்க வேண்டும்

கோமாதா வள்ளுவன்
முப்பாலை மட்டுமே
கரக்க வேண்டும்

தமிழோடு கொஞ்ச
கொஞ்ச நாள் இருக்கவேண்டும்

தமிழ் இல்லை
என்றால் என் உயிர்
இறக்க வேண்டும்

எழுதியவர் : குமார் (1-Jan-20, 10:41 am)
சேர்த்தது : புதுவைக் குமார்
Tanglish : thamizh vaNakkam
பார்வை : 897

மேலே