புத்தாண்டுப் பாமாலை - 1

பிரிவினை வளர்க்கும் சாதி
...மதமெனும் பேய்கள் வீழ,
பரிவினை வளர்க்கும் செய்கை
...பலசெயும் மேலோர் ஓங்க,
தெரிவரு ஞானம் நல்கும்
...சிந்தனை நூல்கள் தோன்ற,
விரிகதிர் ஒளியைப் போல
...விரைந்திடும் புதிய ஆண்டே!

எழுதியவர் : இமயவரம்பன் (1-Jan-20, 6:10 pm)
சேர்த்தது : இமயவரம்பன்
பார்வை : 2555

மேலே