புத்தாண்டுப் பாமாலை - 2

வன்பகை என்னும் தீயை
...வளர்த்திடும் தீயோர் தம்மை
அன்பெனும் சக்தி கொண்டே
...அணைத்திட அமைதி கூடும்,
இன்பமே திகழும், பாரில்
...அந்நியர் யாரும் இல்லை
என்றபே ருண்மைத் தோன்ற
...எழுந்திடும் புதிய ஆண்டே!

எழுதியவர் : இமயவரம்பன் (1-Jan-20, 6:14 pm)
சேர்த்தது : இமயவரம்பன்
பார்வை : 2445

மேலே