முகவெட்டும் உடல் நிறமும்

முகமயிரும் தலைமுடியும் முகவெட்டும்
உடல் நிறமும் உருவ அமைப்பும் பார்வையும்
அலங்கார அணிகலனும் ஆடை அலங்காரமும்
எந்நோக்கத்திற்கு இந்நாட்களில் இளைஞர்களும்
யுவதிகளும் தாறுமாறாய் தம்மை மாற்றிக் கொண்டு
கேடை விலைக் கொடுத்து வாங்கி அதனோடு
விராகதாபத்தை தீர்த்துக் கொள்ள துணிகின்றனரோ
நிலத்திற்கு தகுந்தாற்போலே பயிறும் உணவும்
விளைந்து வளந்தர இயற்கைப் படைத்துள்ளது
அது போலே உள்ளுறுப்பையும் உருவ அமைப்பையும்
இவ்வுலக இயற்கை உருவாக்கியுள்ளது
அவற்றை சமப்படுத்தி அத்துமீற நினைப்பதால்
எவ்வகையிலேனும் துன்பம் வந்தே தீரும்.

எழுதியவர் : நன்னாடன் (3-Jan-20, 9:37 am)
பார்வை : 95

மேலே