ஒன்றினுள் ஒன்றாய்

வானம் போற்றுவோம் நிறமாறும்
அழகு வானம் போற்றுவோம்
நீல பூமி போற்றுவோம்
அருமை பூமியைப் போற்றுவோம்
நிறைந்தக் காற்றுப் போற்றுவோம்
உலகக் காற்றைப் போற்றுவோம்
ஆற்றல் நெருப்புப் போற்றுவோம்
அனல் நெருப்பைப் போற்றுவோம்
குளிர்ந்த மழையைப் போற்றுவோம்
உயிர் மழையைப் போற்றுவோம்
பூதங்கள் ஐந்தும் புனிதம் வாய்ந்தவை
உயர்வான புனிதம் வாய்ந்தவை
புதுமுறை எவை வந்தாலும்
இப்பூதத்திற்குள்ளவே அடக்கம்
எவ்வகை மருந்தால் காப்பிணும் கடைசியில்
இப்பூதத்திற்குள்ளேயே சிதைவோம்
இவ்வுலக உயர்வு எவையென்றாலும்
இப்பூதங்களின் கால்தூசிக்கு சமமே
இவைகளை சிதைப்பதும் கெடுப்பதும்
உலக உயிர்களின் கெடுதலுக்குத் தொடக்கம்
ஒன்றினுள் ஒன்றாய் ஒன்றியது
ஒன்றின்றி ஒண்டியாய் ஒன்றியங்காது.
---- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (2-Jan-20, 4:26 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 68

மேலே