தடம்மாறும் தலைமுறை

நாகரீகத்தில் நவீனமென
அநாகரீகத்தின் உச்சமென
ஆடையில் அரைகுறையாக
அலங்காரத்தில் அகோரமாக
பழக்கங்கள் பழமையாகி
வழக்கங்கள் புதுமையாகி
வரம்புமீறிய வழிமுறையால்
வகுத்திடும் வாழ்முறையால்
நடைமுறையும் செய்முறையும்
தடம்மாறிய தலைமுறையாகி
புடம்போட்டத் தங்கங்களும்
புழுதிபடிந்த உள்ளங்களாய்
சீறியெழும் சிங்கங்களும்
சீரழிந்த நெஞ்சங்களாய்
மாறிவிட்டக் காட்சிதனை
காண்கின்றக் கவலையால்
எண்ணத்தில் நிலைமாற்றம்
எழுதுவதில் தடுமாற்றம்
எனைத்தாக்கும் காரணத்தால்
கருத்துரைக்கத் தோன்றவில்லை
கவிதையும் பிறக்கவில்லை
பதிவிடவும் இயலவில்லை !


பழனி குமார்
04/01/2020

எழுதியவர் : பழனி குமார் (4-Jan-20, 3:01 pm)
பார்வை : 804

மேலே