அன்பே

மிச்சம்மீதி ஏதுமின்றி
கனவுகளில் திருடிவிட்டாய்
எச்சம்கூட இருப்பிலில்லை
முழுஉயிரை குடித்துவிட்டாய்
இருவிழி கொலைகூர்வாளோ
அணுஅணுவாய் சிதைக்குதடி
இரத்த அணுக்களில்ஊடுருவி
உன் நிழலாய் தரிக்குதடி..
அனலாடும் நெருப்பில்கூட
கொஞ்சம் கருணை நான் பார்த்தேன்..
அன்பே உந்தன் பிரிவினிலே
முழுமுழுதாய் நான் தோற்றேன்..
இது என்ன இந்த இரவினிலே
மனம் முழுதுமுன் நினைவலைகள்..
இனிஎந்தன் விழிகள்தேடும்
உறக்கங்களின் கல்லறைகள்..
சிரிக்காதே..சிதைக்காதே
இமைகளுக்குள் கனவென நுழைந்திடு..

Rafiq

எழுதியவர் : M.MOHAMED RAFIQ (8-Jan-20, 9:41 pm)
Tanglish : annpae
பார்வை : 241

மேலே