காதல்
காதல்♥️♥️
கண்களால் இதயத்தை கலங்கடித்த
காவிய நாயகியே
மீண்கள் என்று தூண்டியல் போட்டேன்
சிக்கியது மீண் அல்ல
நான் தான்.
சிற்றிடை கொண்டு சிங்கார நடை பயிலும் வண்ண மயிலே
உன் சின்ன சிவப்பு இதழில் தேன் குடிக்கவா
பளபளக்கும் உன் கண்ணத்தில் விழும் அழகிய குழியில் பல்லாங்குழி விளையாடவா
அம்பாக செயல்படும் உன் விழிகளுக்கு என் விரல் கொண்டு மை தீட்டவா
அலங்கார தேர் போல் அசைந்து வரும் அதிசயமே
என் கரம் கொண்டு உன் இல்லாத இடைதனை வளைத்து, உனை என்னுடன் அனைத்து
பல மாயங்கள்
சொல்லி தரவா
வெட்கம் தவிர்த்து அருகில் வா
காதல் கவிதை தனை உன் காதில் கூறாமல்
உன் இதழ்களில் எழுதுவேன்.
நாணத்தில் என் தோள் மீது படர்ந்து மலர்க்கொடியே
வண்டாக மாறிய நான் தேன் குடிக்க
தென்றல் அது இருவரையும் ஆர தழுவ
இனியதொரு இன்னிசை இங்கே அறங்கேற
சூழ்நிலை கைதியாக நீயும் நானும்
சுகமான இந்த தருணம்
பக்குவான நேரம்
பகிர்ந்து கொண்ட இந்த முதல் இன்பம்
பல்லாயிரம் ஆண்டானாலும் மறக்காது.
மறவாது
வாழ்க காதல்.
காதல் செய்தால் வாழ்க்கை இனிக்கும்.
- பாலு.