தை
தை பிறந்தாச்சு
வழி பிறக்கும் பாதை பார்த்து
காத்துக்கிடக்கும் கால்களாயிரம்
புதிரெடுக்க உழவன்படும்பாடு
வாசலில் தோரணத்தோடு
புதிர்கட்டும் அவன் முகம் மலர்ந்திடும்
பொங்கலுக்கு புத்தரிசி தயார்
என்றவன் பெருமிதம்
சூடு மிதித்து மூட்டை மூட்டையாய்
பொங்கல் பெரு நாளுக்கு முன்பே
வீடு வந்து சேர்ந்திடும் புத்தரிசி
கால நிலையை கண்ணும் கருத்துமாய்
உற்று நோக்கும் உழவன் திருநாள்
ஊர் மக்கள் ஒன்று கூடி
விடுமுறை விட்டு விருப்போடு கொண்டாடும்
எங்கள் பொங்கல் திரு நாளுக்கு
மாவிலை தோரணம் வீட்டு வாசலில் தொங்க
சாணத்தால் முற்றத்தை மெழுகி
அரிசி மாக்கோலம் அம்மா போட
குத்து விளக்கு நிறைகுடத்துடன்
மூட்டி விட்ட செங்கல் அடுப்பில்
புத்தரிசியிட்டு பாலும் சக்கரையும் பொங்கி
சூரிய உதயம் முற்றத்தை முத்தமிடும் நேரம்
பொங்கல் பானையிலிருந்து பூப்போல
பொங்கி வழியும் வெள்ளை நுரையை
பூச்சி நாசினியாய் மூட்டைப்பாலென
பெயர்சூட்டி வீடெங்கும் தெளித்து
பொங்கலோடு முக்கனியும் கரும்பும்
தலைவாழையிலையில் படைத்து
சூரியனை வணங்கி குடும்பத்தோடு
உண்டு மகிழ்ந்து உற்றார் உறவினர்க்கும்
அயலவர்க்கும் கொடுத்து அன்பை பகிர்ந்து
விருந்தோம்பி நன்மை நாளெல்லாம் பயக்க
ஒருவருக்கொருவர் நன்றி சொல்லும்
தை மாதமே வருக வருக!
வா