மாலை பொழுது

மாலை பொழுது😍

பொன் மாலை பொழுதும்
இளமையும் ஒன்று தான்.
இரண்டும் வருவதும் தெரியாது போவதும் தெரியாது.
இரண்டிற்கும் கால அளவு மிக குறைவே.
காலை நேரமும், இரவு நேரமும் மிக நீளமானது.
மனித வாழ்வில் இளமை பருவம் சில காலமே.
மாலை பொழுது ஒரு அற்புத தருணம்.
இளமை பருவம் இனிமை நிறைந்தது.
கவலை மறந்து சிறகடித்து பறக்கும் ஆர்பரிக்கும் பருவம் அது.
நல்ல மாலை பொழுதில்
தென்றல் அது தவழ்ந்து வரும்.
பூத்து குலுங்கும் மல்லிகையை தென்றல் அது தாலாட்டும்.
வறுமையில் வாடினாலும் காதல் இளமையின் கதவை தட்டும்.
இனிமை நிறைந்த இளமை கதவை திறந்து காதலை கட்டி அனைக்கும்.
வண்ண விழியாளின் அம்பு பார்வைக்கு
ஏங்கி தவம் கிடக்கும்.
செங்கதிரோன் உக்கிரத்தை குறைந்த வண்ணம் சமாதானம் ஆகி கடலில் இறங்கும்.
பொய் கோபம் கொண்ட மங்கை அவள்
தன் மாதுளம் இதழால்
காளை அவனை ஏசுவாள், பேசுவாள்.
நிலவு அவள் நீல வானவில் பவனி வர ஆயத்தம் ஆவாள்.
தமிழ் மகள் அவள் திருதேர் என அழகு சிலையாக அவனை காண வருகை தருவாள்.
மழை மேகமது வான்மதியை அதை மறைக்கும்.
சின்ன இடை கொண்டு சிங்கார நடை பயிலும் வண்ண மயிலின் கருங்கூந்தல் அவள் முன்னழகை முற்றிலும் மறைக்கும்.
ஆர்பரித்த கடல் அலைகள் கரை தேடி விளையாடும்.
கன்னி அவளும், அவனும் ஆனந்தமாக

மாலை பொழுதில் பொன்னிற வெளிச்சத்தில் காலார கைகோர்த்து
கடற்கரை ஓரம் நடந்து இளமையை திருவிழா என கொண்டாடி மகிழ
மாலை நேரம் அது மின்னலன முடிவுக்கு வர,
கைகோர்த்த காதலர்கள்
கவலையுடன் பிரிய...
பல நினைவகளுடன் மாலை பொழுதை இளமை அது கடக்க....
மாலை நேரம் அது தினம் வரும்.
இளமை! மானுட வாழ்வில் ஒரு முறையே வரும்.


- பாலு.

எழுதியவர் : பாலு (12-Jan-20, 6:55 pm)
சேர்த்தது : balu
Tanglish : maalai pozhuthu
பார்வை : 583

மேலே