ஏருழவன் கைசிவந்தால்தான்
வாழ்வெல்லோர்க் கும்வசந்தத் தென்றலின் தோட்டமில்லை
வாழ்வு உணவுடைகூ ரைக்கான போராட்டம்
வான்சிவந் தால்விடியும் ஏருழவன் கைசிவந்தால்
தான்விடியும் எல்லோர்க்கும் இங்கு !
வாழ்வெல்லோர்க் கும்வசந்தத் தென்றலின் தோட்டமில்லை
வாழ்வொரு அன்றாடப் போராட்டம் - வாழ்நீல
வான்சிவந் தால்விடியும் ஏருழவன் கைசிவந்தால்
தான்விடியும் எல்லோர்க்கும் இங்கு !
----முறையே இன்னிசை நேரிசை வெண்பாக்கள்
எல்லோருக்கும் புதிய விடியலின் பொங்கல் வாழ்த்துக்கள்