அன்பினால் பொங்கலிடு

என்னவளே -
ஒரே பானையில் - முப்பொங்கல் செய்யும்
ஒப்பற்ற வித்தையை எங்கே கற்றாய்
மேலாக அள்ளினால் நீர் பொங்கலும்-
நடுவிலே அள்ளினால் சர்க்கரைப் பொங்கலும் -
அடியிலே அள்ளினால் வெண்பொங்கலும் வருகிறதே -
இந்த நுட்பம் உனக்குமட்டுமே சாத்தியம் -
ஆனால் - ஒருபோதும் கோபத்தால்மட்டும் பொங்கலிடாதே -
அன்பினால்மட்டுமே பொங்கலிடு - அந்த பொங்கலே
நம்மை வாழவைக்கும் சர்க்கரைப் பொங்கலாகும்...!!!
- கவிஞர் நளினி விநாயகமூர்த்தி
அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.....

எழுதியவர் : - கவிஞர் நளினி விநாயகமூர்த (14-Jan-20, 11:42 pm)
பார்வை : 82

மேலே