சங்கர்ராஜ் தங்கராஜ்

கொள்கைப் பிடிப்பில் நட்பையும்
நட்புக்காக கொள்கைகளையும்
சமரசம் செய்யாமலேயே
சமரசம் காண்பவன்.. நண்பன்
சங்கர்ராஜ் எனும் சரா...
இவன் கொள்கைகள் அநீதி சாரா...

சராவைப்பற்றி எது எழுதினாலும்
அது மிகையாகத் தோன்றும்...
ஆனால் சொல்வதெல்லாம்
உண்மை... உண்மை தவிர வேறில்லை...

எல்லாவற்றிலும் அறிவுசார்
அணுகுமுறை இவனுடையது...
பல்கலைக்கழகம் ஒன்று
இவனுள் முழுநேரமும்
செயல்பட்டுக் கொண்டிருக்கிறது...

சமூக நீதி... சமூக நல்லிணக்கம்
ஆண் பெண் சமநிலை
பகுத்தறிவுக் கொள்கைகள்
சமயோசிதம்... நகைச்சுவை...
இவை எல்லாம்
சராவிற்குச் சம்மதம்...
அதனால் இவனிருக்குமிடத்தில்
நிலைத்திருக்கும் சமாதானம்...

விட்டுக் கொடுப்பதில்
வெற்றிகளைத் தட்டிச் செல்வான்...
இதனை இவ்வாறு
சொல்ல வேண்டும்... இவ்வாறு
செய்ய வேண்டும்...
என்பது சராவிற்கு அத்துபடி...
அதைச் சொல்லியாக வேண்டும்
உள்ளதை உள்ளபடி...

வெண்பாக்களில் அடங்காது
சராவின் பெருமைகள்
கூறும் பண்பாக்கள்...
தனக்குத்தானே வகுத்துக்கொண்டான்
இலக்கணம்.. தான் எப்படி
இருக்க வேண்டும் என்று...
தனதறிவைப் பெருக்கிக் கொண்டான்
இலக்கியம் பல கடந்து...
என்றும் தன் பயணத்தில்
உற்சாகம் கூட்டி சோர்வைக்
கழித்து வாழும் வாழ்க்கைக்
கணிதம் தெரிந்தவன்..

வார்த்தை விளையாட்டு
கிரிக்கெட் போன்றவை
சராவுக்குப் பிடித்த விளையாட்டுகள்...
இவை இரண்டிலும்
நின்று சாதிப்பார்...
சிக்சர்களை பறக்க விடுவார்...

திருவைகுண்டம் வயல்வெளி
பார்த்து வளர்ந்த
சரா எனும் சங்கர்ராஜ்
திருச்சிராப்பள்ளி பாரத்
மின்வெளி கண்டு வாழ்கிறான்...

இவனது கம்யூனிச சிந்தனை
சொல்கிறது பொதுவுடமை...
எல்லா இசங்களைக்
கொண்டாரையும் தன்வயப் படுத்துவது
சராவின் தனியுடமை...

ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணித் தண்ணீரும்
திருச்சி காவிரித் தண்ணீரும்
குடித்து வளர்ந்த சராவுக்கு
துன்பங்கள் வாரா...
இவனது பல்துறை
அறிவு உயரம் கண்டு
மலைக்கோட்டை மலைத்துப் போகிறது...

இவனது இதய லப்டப்பில்
நட்புக்கு அதிக ஒதுக்கீடு
இயல்பாய் இருக்கிறது...
எனவே இவனது இதயம்
பலமாக இருக்கிறது..
அது என்றும் நட்புக்குப்
பாலமாக இருக்கிறது...

சொலல்வல்லன் சோர்விலன்
அஞ்சான் அவனை
இகல்வெல்லல் யார்க்கும் அரிது....
சங்கர்ராஜ் இதில் தங்கராஜ்...

அன்பு நண்பன் சங்கர்ராஜ்...
ஆரோக்கியம் உடல்நலம்
முதன்மையாய்க் கொண்டு
வாழ்க பல்லாண்டு...
வளங்கள் எல்லாம் பெற்று...
இனிய பிறந்தநாள்
நல் வாழ்த்துக்கள் சங்கர்ராஜ்..
🙋🏻‍♂👍👏😀🙏🌹🌺🌷🎂🍰

எழுதியவர் : சுந்தரராஜன் ராஜகோபால் (20-Jan-20, 8:33 pm)
சேர்த்தது : இரா சுந்தரராஜன்
பார்வை : 155

மேலே