சகோதரா

ஓடிவிளையாண்ட நாட்களில் நீ
பரம எதிரியே
தொட்டதெல்லாம் குற்றமென
சண்டைபிடிப்போம்
ஒளித்துவைத்து ரகசியமாய்
உண்டு களிப்போம்
பெரும்தொல்லை எனவேதான்
எண்ணியிருந்தோம்..
மழலை மறந்து
விடலை புகுந்து
இடைவெளி கொஞ்சம் நம்முள்
இடையில் வந்த பிரிவில்
உனை எதற்காகவோ
இழக்கிறேனடா
வெளிப்படையாய் உன்னிடத்தில்
செல்லிட மனம்
இல்லை
ஆயிரம் நட்புக்கள் நான்கண்டாலும்
நீ தந்த
பெருந்துணை யார் தருவார்
சகோதரா நீ
என் முழுமுதல் தோழன்.

எழுதியவர் : Rafiq (20-Jan-20, 10:15 pm)
சேர்த்தது : Rafiq
பார்வை : 310

மேலே