வண்ணத்துப் பூச்சியானேன் நான்
அழகு மலர்ச்சோலையில்
அழகழகாய் பூத்து
குலுங்கும் மலரெல்லாம்
கண்ட என் மனதில் உதித்தது
ஓர் எண்ணம் .... அக்கணமே
கற்பனையில் நான் ஓர்
வண்ணத்துப் பூச்சியாய் உருவெடுத்தேன்
சோலையில் பூத்துக்கிடக்கும்
ஒவ்வோர் அழகு மலர்மீதும்
அமர்ந்து அன்பாய் கொஞ்சி
மலரை நோகவிடாது கலையாது
கசக்காது மென்மையை அனுபவித்து
மோகமெல்லாம் தீர பறந்துபோனேன்
வானத்தில் உயர உயர
மலரெல்லாம் வாழ்த்து கூற