முன்னாள் காதலி

இதனை வாசிக்கையில்
ஒருவேளை
இது நானோ என
நீ
நினைத்தால்
ஆம்
நீ தான் அது..
உனக்கு ஒரு குறிப்பு தருகிறேன்
நாம்
ஒரே முறைதான் பேசியிருக்கிறோம்
எனை நீ ஆண்ட காலம்
உண்மையில் கடந்துவிட்டதுதான்
ஆயினும்
உனக்கான கவனம் என்றுமே
சிதறியதில்லை.
நாம் பேசிய அன்றைய நாள்
அவ்வளவு ஆனந்தமான
நினைவாய்த்தான் இன்னும் இருக்கிறது
சமீப நாட்களில் நிஜமாய்
உனை நான் மறந்துதான் இருந்தேன்
உனை மறக்க நான்
சிரத்தை எடுத்துக்கொண்டதும்
உண்மைதான்
எப்படி அறிந்துகொண்டாயோ
தெரியவில்லை
நேற்றைய கனவில் முழுதாய் நிறைந்திருந்தாய்
இதுவரை உன்பெயர் சொல்லி அழைத்திடாத நான்
ஆர்வமாய் அழைத்ததை இப்பொழுதும் ரசிக்கிறேன்..
உன் பெயரின் ஒவ்வொரு எழுத்திற்குமான இடைவெளி நீண்டுகொண்டே செல்கிறது..
சலனமேற்படுத்திவிட்டாய்..
உன் பேரலைகள் மட்டுப்பட
இன்னும் சற்று காலமாகலாம்..

Rafiq

எழுதியவர் : M.MOHAMED RAFIQ (21-Jan-20, 9:21 pm)
சேர்த்தது : Rafiq
Tanglish : munnaal kathali
பார்வை : 163

மேலே