பெண்கள் கோவிக்கக் கூடாது
பெண்கள் கோவிக்கக் கூடாது
அன்னை தயையு மடியாள் பணிமலர்ப்
பொன்னி னழகும் புவிப்பொறையும்- - வண்ணமுலை
வேசி துயிலும் விறன்ம ந்ரிமதியும்
பேசி விலையுடையால் பெண்.
பாரதி சொன்ன பெண் இவளல்ல. அதற்கும் முன் கவிஞ்சர்கள் எதிர்பார்த்த பெண்கள்.
இப்படி யிருக்க வேண்டுமாம். இதெல்லாம் மலையேறி ஒரு நூற்றாண்டு ஆகிறது. இப்போது
இதையெல்லாம் எதிர் பார்ப்ப வன் கட்டாயம் உதை படுவான். இந்தப் பெண் எங்கும்
கிடைக்கமாட்டாள்.பெண் என்பவள் அடிமையா என்ன என்று நீங்கள் கேட்பது எல்லோர்
காதிலும் கேழ்க்கிறதுட் இப்படியும் மனிதர்கள் வாழ்ந்தார்கள் என்பதைக் காட்டவே இதை எழுத
நேர்ந்தது தவறு என்றால் விட்டுவிடுங்கள்.
விளக்கம்:- மனைவியாள் கணவனுக்கு தாதிபோலப் பாதப்பணிவிடை செய்பவளும் மந்திரிபொல்
சம யோசித மறிந்து நல்லாலோசனை சொல்பவளும் ஸ்ரீ மகா லட்சுமி போலப் பெண்ணைப்
பெண் இச்சிக்கத்தக்க அதிரூப சௌந்தர்யவதியும், பூமாதேவி போல சலியாத பொறுமை
யுடையவளும் , வெடை போல கணவனை சரசம் செய்து மகிழ்விப் பவளும், தாயைப்போல
நல்ல இனிய உணவினை செய்து படைப்பவளும் தான் மனைவியாம். அவளே தாய்க்குப் பின்
தாரம் என்பவளாம்.