கமலா பால்

திரைப்பட உதவி இயக்குநரிடம் இயக்குநர்:

என்னய்யா நடிக்க வாய்ப்புக் கேட்ட பொண்ணு வந்திருக்கிறதா?
@@@@@
வந்திருக்காங்க அய்யா. பார்க்கிறதுக்கு அமலா பால் மாதிரியே இருக்கிறாங்க. ஒரே வித்தியாசம் இவுங்க கன்னத்தில அழகான சின்ன மருகு உள்ளது. தமிழ்நாட்டுப் பொண்ணு. இனிமையான குரல். இசைக் கல்லூரியில் படித்தவராம். எல்லாவகை நாட்டியமும் அத்துபடியாம். சான்றிதழ்களை என்னிடம் காட்டினார்.
@@@@@@
ரொம்ப சந்தோசம், கரிஷ். அந்தப் பொண்ணை வரச்சொல்லு.
@@@@@@@
வணக்கம் இயக்குநர் அய்யா.
@@@@@
வணக்கம். வணக்கம். உம் பேரு என்னம்மா?
@@@@@@
என் பேரு 'கருமாரி'ங்க அய்யா. நான் பிறந்து வளர்ந்தது திருச்சில. படிச்சது சென்னை, பம்பாய்.
@@@@@@
உங் குரல் ரொம்ப இனிமையா இருக்குது. நீ அமலா பால் மாதிரியே இருக்கிற. உம் பேரு 'கருமாரி'-ன்னு சொன்னியா?
@@@@@
ஆமாங்க அய்யா.
@@@@@@
'கருமாரி' அழகான சாமி பேரு. ஆனா திரைப்படத்தில் நடிக்க அந்தப் பேரு சரிப்படாது. அதனால உம் பேர் இனிமேல் 'கமலா பால்'. இந்தப் பேரோட நீ நடிக்கிற முதல் படமே வெள்ளிவிழா கொண்டாடும். படத்தின் பேரு 'நான் கமலா பால்'. படத்தின் இந்தப் பேரே தமிழக திரை ரசிகப் பெருமக்களைச் சுண்டி இழுக்கும். கரீஷ் நம்ம கமலா பாலிடம் ஒப்பந்தத்தில கையெழுத்து வாங்கிட்டு அஞ்சு லட்சம் முன்பணம் (அட்வான்ஸ் தொகை) கொடுத்திருய்யா.
@@@@@
சரிங்க அய்யா.
@@@@@@
இந்தாம்மா கமலா பால் நாளைக்கு படப்பிடிப்பு. காலை ஒன்பது மணிக்கெல்லாம் வந்திடணும்.
@@@@@@
ரொம்ப நன்றிங்க அய்யா.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
"■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
திரை (கலப்பட)த் தமிழை தவிர்ப்போம். தமிழ் உணர்வை வளர்ப்போம். தமிழ்ப் பெயர்கள் தமிழரின் அடையாளம்.

எழுதியவர் : மலர் (22-Jan-20, 9:03 am)
சேர்த்தது : மலர்91
Tanglish : kamala paal
பார்வை : 112

மேலே