தாய்மொழி

பிறமொழி கற்றுக்கொள்வது ஒன்றும் தவறில்லை. ஒவ்வொரு மொழியிலும் தத்துவங்கள் கொட்டிக்கிடக்கின்றன. எந்த ஒரு விஷயமும் புதிதாக கற்றுக்கொள்வது கடினம் தான். ஒரு மொழியை கற்றுக்கொள்ள நாம் எவ்வளவோ முயற்சி செய்து பார்ப்போம். முழுமையாக கற்றவர்கள் யாரும் இல்லை. ஓரளவு ஏதோ கற்றுக்கொண்டு இருப்பார்கள்.

சிலர் ஐந்து ஆறு மொழிகள் சரளமாக பேசுவார்கள். அதை பார்க்கும் போது ஆச்சரியமாக இருக்கும். நாமும் பேசவேண்டும் என்று தோன்றும். அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என தெரியாது. ஸ்பொகேன் கிளாஸ் போ என்பார்கள், நிறைய அப் இருக்கு பதிவிறக்கம் செய்து கற்றுக்கொள் என்பார்கள். ஒரு மொழியை தனி ஒருவரால் கற்றுக்கொள்ள முடியாது. வெவ்வேறு சூழ்நிலைகளை கண்டவர்களால் மட்டுமே கற்றுக்கொள்ள முடியும்.

எடுத்துக்காட்டாக, சினிமாக்காரர்கள் விரைவில் கற்றுக்கொள் முடியும். ஒரு மொழியை கற்றுக்கொள்ள வேண்டும் என்றால், அந்த மொழி பேசுவோர் இருக்கும் இடத்தில் இருந்தால் விரைவில் கற்றுக்கொள்ள முடியும். வெளிநாடுகளில் வேலை செய்பவர்கள் அடுத்தவர்களிடம் பேசும் வாய்ப்பை பெறுகின்ற காரணத்தால் விரைவில் கற்றுக்கொள் முடியும்.

பிற மொழி கற்பதில் என்ன இருக்கிறது.கற்றுக்கொள்ள ஏன் ஆசைப்படுகின்றோம்.
ஒன்று, பிறர் பேசுவதை பார்த்து ஆசை பட்டு பேச நினைப்பது. இரண்டு, பிறமொழி (குறிப்பாக ஆங்கிலம்) கற்று பேசினால் பெரிதாக எண்ணிக் கொள்வது. மூன்றாவது, சந்தர்ப்ப சூழ்நிலை.

பிற மொழிகளை விட இந்த ஆங்கிலத்தில் மட்டும் அப்படி என்ன இருக்கிறது. அதை கற்றுக்கொள்ள நாம் எதற்காக ஆசை படுகிறோம்.
என்னதான் நம்மை விட்டு சென்றாலும் மொழியால் அவர்கள் ஆட்சி தானே.

மகாத்மா காந்தி அவர்களுக்குள் மூன்று கேள்விகள்.
1. நாம் எதற்காக பிறமொழி இலக்கியத்தை கற்றுக்கொள்ள வேண்டும்?
2. அதனால், என்ன பயன் இருக்கிறது?
3. வால்மீகியின் இலக்கியம் பிறமொழிகளில் நன்றாகத்தானே புரிந்துகொள்ள முடிகிறது. பிறமொழிகளில் உள்ளவற்றை பிறமொழிகள் அனைத்தையும் கற்றுத் தான் தெரிந்து கொள்ள வேண்டுமா?

கற்றுக்கொள்வது பேசுவது ஒருபுறம் இருக்கட்டும். எழுதுவது என்றால் ஆங்கிலத்தில் தான் எழுதவேண்டும்.
அப்படி எழுதினால் பெருமையாய் எண்ணிக் கொள்வார்கள். என்னதான் பிறமொழி புலமை கொண்டாலும் தாய்மொழி போல இருக்காது. பிரபல லத்தின் எழுத்தாளர் Dante அவர்கள், " தாய் மொழியில் எழுதுகின்ற போது தான் நம் உணர்வுகளை சரியாக வெளிபடுத்த முடியும்" என்கிறார்.

எந்த மொழியாக இருந்தால் என்ன, வாய்ப்புகள் வருகின்ற போது அனைத்து மொழிகளையும் கற்றுக்கொள்வோம். அதில் ஒன்றும் தவறில்லை. மகாகவி பாரதியார் சொல்கிறது போல, எல்லா செல்வங்களையும் நம்மொழியில் கொண்டுவந்து சேர்ப்போம்.

எழுதியவர் : Suruleeswari (23-Jan-20, 5:28 pm)
சேர்த்தது : சுருளிஸ்வரி
Tanglish : thaaimozhi
பார்வை : 440

மேலே