அண்ணா
இந்தி மொழி
வேண்டாம் என்று
சொன்ன நா
அது அண்ணா
அவரைப் பாடுவதற்கு
பெருமை கொள்கிறது என் நா
அண்ணாவால்
கீழிருந்த தமிழ்நாட்டை
மேலிருந்த வடநாடு
அண்ணாந்து பார்த்தது
அண்ணா காஞ்சிவரம்
தமிழகத்திற்கு அளித்த வரம்
பெரியாரின் பட்டறையில் பட்டை தீட்டப்பட்ட வைரம்
பூக்களை நேசிக்கும் வயதில்
இவர் மக்களைப் பற்றி
யோசித்துக் கொண்டிருந்தார்
இவரின் குரல் குரல்
அல்ல திருக்குறள்
இவர் கருப்பு ஆடை அணிந்து
தமிழகத்தில் கருப்பு ஆடுகளை விரட்டியவர்
தன் நா என்ற ஆயுதத்தால்
அண்ணா சமூக விரோதிகளை மிரட்டியவர்
இறுதியில்
புற்று அந்த சரித்திர
வரலாற்றுக்கு வைத்தது முற்று
இந்தியப் பெருங்கடலாய்
அண்ணாவின் புகழ் நீண்டு இருக்கட்டும் இவ்வுலகை ஆண்டு இருக்கட்டும்
அதற்குத் துணையாய் இந்த ஆண்டு இருக்கட்டும்