கா-வில முடியற மாதிரி பேரு வையுங்க சோசியரே

வணக்கம் சோசியரே.
@@@@@@
வணக்கம். வணக்கம். வாய்யா மூக்கறுத்தான்பட்டி முருகய்யா. எல்லாம் நல்ல விசயம் தானே.
@@@@@
ஆமாங்க அய்யா. என் மனைவிக்கு இரண்டாவது குழந்தையும் பெண் குழந்தை. நேத்துக் காலைல சரியா ஆறு மணிக்கு பொறந்துச்சு. நீங்க எங்க பரம்பரை குடும்ப சோசியராச்சே. குழந்தைக்கு ஒரு நல்ல பேராச் சொல்லுங்க. 'கா'-வில முடியற மாதிரி ஒரு நல்ல பேரா வையுங்க சோசியரே.
@@@@@@
அதுக்கென்ன சொல்லிட்டாப் போச்சு.
(ஐந்து நிமிடம் கணித்துப் பார்த்தபின்) முருகய்யா, உன் குழந்தை பிறந்த நேரம் கோடில ஒரு பெண் குழந்தைக்கு அமையற நேரம். உன் குழந்தை பெரிய சிந்தனையாளரா வருமய்யா. உலகத்தில பெண் சிந்தனையாளர்களும் தத்துவ ஞானிகளும் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவிலகூட இல்லை. உன் பெண் குழந்தை அதை முறியடிக்கப் பொறந்திருக்குதய்யா, முருகய்யா. பேரு 'கா'வில முடியற மாதிரி இருக்கம்ணு சொல்லிருக்கிற. உம்.... 'மந்திகா' -ன்னு (Manthika = thoughtful) பேரு வச்சிருய்யா.
@@@@@@
ரொம்ப நன்றிங்க சோசியரே. வர்றேனுங்க.
@@@@@@
சரி. வாய்யா.

எழுதியவர் : மலர் (27-Jan-20, 10:10 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 131

மேலே