வெறும் கனவு

ஆகாசம் தொடும் தூரம்
அள்ளிக்கொள்ள நட்சத்திரக் கூட்டம்
அடுக்கடுக்காய் வான்வெளி
அளக்கத் துடிக்கும் சிறுமனசு
தவழ்ந்து விளையாட மேகப்பந்து
தண்ணீர் தர செவ்வாய்க் கிரகம்
வெளிச்சத்துக்கு கதிர் விளக்கு
வெறும் வயிறு நிரப்ப நிலாச்சோறு
உடுத்திக்கொள்ள வானவில் சேலை
உலா போக வால்மீன் படகு
கரைகள் தொட கைகள் நீட்ட
கண்விழித்துப் பார்த்தால் அத்தனையும் வெறும் கனவு......!!!

வேல் முனியசாமி...

எழுதியவர் : வேல் முனியசாமி (27-Jan-20, 10:59 pm)
சேர்த்தது : வேல் முனியசாமி
Tanglish : verum kanavu
பார்வை : 257

மேலே