அறிவு vs ஞானம்

அறிவு v/s ஞானம்

அறிவை கல்வியினால்
பெற முடியும்.
ஞானத்தை தியானத்தாலும், தவத்தாலும் மட்டுமே பெற முடியும்.
அறிவு மானுட வாழ்வியலோடு ஒட்டி உறவாடும்.
ஞானம் பரபஞ்சத்தோடு தொடர்பை ஏற்படுத்தும்.
அறிவை எளிதாக பகிர முடியும்.
ஞானத்தை பகிர முடியாது, உணர தான் முடியும்.
அறிவு, கல்வி கண்னை திறக்கும்.
ஞானம் மானுட மனக்கண்னை திறக்கும்.
அறிவு பல அறிவுரை கூறும்.
ஞானம் அகத்தின் அழுக்கை சுத்த படுத்தும்.
அறிவு நிறைய பொருள் ஈட்டும்.
ஞானம் நாளும் பரம்பெருளை தேடும்.
அறிவு ஆர்பரித்து ஆட்டம் போடும்.
ஞானம் என்றும் அமைதி காக்கும்.
அறிவு சோதனைக்கு உட்பட்டது.
ஞானம் எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்டது.
அறிவு நிறைய ஆசைபடும்.
ஞானம் ஓசையில்லாமல் ஆசையை விரட்டி விடும்.
அறிவு பாசத்தை தந்து மானுடத்தை பாழ் படுத்தும் .
ஞானம் அன்பை பொழிந்து மானுட பண்பை உயர்தும்.
"அம்மணம்" வெட்கப்படும்.
"நிர்வாணம்" வணங்கப்படும்.

- பாலு.

எழுதியவர் : பாலு (27-Jan-20, 9:15 pm)
சேர்த்தது : balu
பார்வை : 57

மேலே