திண்டாட்டம்

கிறுக்கல்கள் எல்லாம் தத்துவங்களாய்,
தத்துவங்கள் எல்லாம் மடமைகளாய்,
மடமைகளெல்லாம் மேம்பட்டனவாய்,
மேம்பட்டனவெல்லாம் மதிக்கப்படாதவையாய்,
மதிக்கப்பட வேண்டாதவை எல்லாம் கொண்டாடப்படுவனவாய்,
கொண்டாடப்பட வேண்டியவை எல்லாம் முக்கியத்துவமற்றனவையாய்,
முக்கியதுவமற்றனவை எல்லாம் தலையங்கங்களாய்,
தலையங்கங்களை அலங்கரிக்க வேண்டியவை எல்லாம் பேசப்படாமலே,
பேச வேண்டாதவை எல்லாம் போற்றப்பட,
போற்றப்படுவரெல்லாம் எதற்கும் எடுத்துக்காட்டாய் பாவிக்கப்பட- இச்சமூகத்தில்
பெரும்பான்மை இத்தகையோராய் போய்விட – இவ்வேடிக்கை கூட்டத்தில்
சிறுபான்மை நமக்கும் திண்டாட்டம் தானோ !

எழுதியவர் : மகா (27-Jan-20, 5:19 pm)
சேர்த்தது : mahakrish
Tanglish : THINDATTAM
பார்வை : 66

மேலே