உலக அமைதி தினம்
🌺🌹🌺🌹🌺🌹🌺🌹🌺🌹🌺
*உலக அமைதி தினம்*
படைப்பு *கவிதை ரசிகன்*
குமரேசன்
🌹🌺🌹🌺🌹🌺🌹🌺🌹🌺🌹🌺
பொன் பொருள்
முத்து வைரம் இவற்றை விட
இவ்வுலகில்
விளைவதிக்க முடியாதது
அமைதிதான்....
ஏனென்றால் ?
பணத்தால்
அமைதியை
வாங்க முடியாது....!
ஆதிமனிதன்
ஆடம்பரமாக வாழவில்லை....
அமைதியாக வாழ்ந்தான்
ஆடம்பரம்
அமைதிக்கு எதிரியா .....?
பறவைகள்
ஆசைபடுவதில்லை....
ஆனால்
அமைதியாக வாழ்கிறது....
ஆசை அமைதியை
அழித்து விடுமா...?
தாவரங்கள்
அணு ஆயுதங்களை
வைத்திருக்கவில்லை....
அமைதியாக வாழ்கிறது....
அணு ஆயுதங்கள்
அமைதியை
கொன்று விடுமோ .....?
புழு பூச்சிகள்
வலிமை இல்லாமல்
இருக்கிறது....
அமைதியாக வாழ்கிறது.....
வலிமை
அமைதிக்கு சாபமா.....?
விலங்குகள்
பகுத்தறிவு
இல்லாமல் இருக்கிறது .....
அமைதியாக வாழ்கிறது....
அமைதி
பகத்தறிவுக்கு அப்பாற்பட்டதா?
நம்மிடம் இல்லாத ஒன்று
மற்றவர்களிடம் இருந்தால்
அடித்துத்தான்
பிடுங்க வேண்டும்
என்பதில்லை.....
அனைத்தும்
பெறலாம் அல்லவா !!
வல்லரசு நாடுகள்
நினைத்தால்
உலகையே
அழிக்க முடியும்
என்கிறார்கள்......
எங்கே ஒரு புழுவை
உருவாக்கிக்
காட்டுப் பார்க்கலாம்....?
வலிமை என்பது
அழிப்பதில் இல்லை
ஆக்குவதில் இருக்கிறது....!!
இனியாவது
இயந்திரத் துப்பாக்கிக்கு
இதயம் பொருத்துவோம்....!!
கையெறி குண்டுக்குள்ளே
கம்பி மத்தாப்பு
மருந்தை செலுத்துவோம்...!!
எல்லையில்
வெள்ளை புறாவை
காவல் நிறுத்துவோம்....
வானத்தைப் போல்
கொடுத்து
பெற்றுக் கொள்ளும்
குணத்தை
வளர்த்துக் கொள்வோம்.......
உலக அமைதி தினத்தை
உலக அமைதியோடு
கொண்டாடும்
நாள் என்று வருமோ...?
*_அனைவருக்கும் உலக அமைதி தின நல்வாழ்த்துகள்_*
*கவிதை ரசிகன்*
🌹🌺🌹🌺🌹🌺🌹🌺🌹🌺🌹