தாண்டவக்கோனே

தாண்டவக்கோனே....
20 / 09 / 2024 .


கையில் படிப்பிற்கு தாண்டவக்கோனே
பையில் பணமில்லையே தாண்டவக்கோனே
பள்ளிக்கூடம் கோயிலடா தாண்டவக்கோனே - இப்போ
பள்ளியறை ஆச்சுதடா தாண்டவக்கோனே
வாங்கின பட்டமிருக்கு தாண்டவக்கோனே - அது
வானத்தில்தான் பறக்குமடா தாண்டவக்கோனே
படிச்ச பட்டமிருக்கு தாண்டவக்கோனே
படிப்புக்கேத்த வேலையில்லை தாண்டவக்கோனே
சமுதாய ஏற்றத் தாழ்வுகள் தாண்டவக்கோனே - இளைய
சமுதாயத்தை கெடுக்குதடா தாண்டவக்கோனே
இலவச கல்வியது தாண்டவக்கோனே - அது
எட்டாக் கனியானது தாண்டவக்கோனே
படிக்கும் மாணவன் தலையில் தாண்டவக்கோனே - கல்விக்கடன்
பாறாங்கல்லாய் ஏறுதடா தாண்டவக்கோனே
களங்கமற்ற வாழ்வதிலே தாண்டவக்கோனே - எல்லாம்
கலப்படம் ஆனதடா தாண்டவக்கோனே
காதல் புனிதம்தான் தாண்டவக்கோனே - இன்றோ
ஆணவக்கொலை ஆனதடா தாண்டவக்கோனே
சாதி சமயம் எல்லாம் தாண்டவக்கோனே - வெறும்
வாய் வார்த்தை ஆனதடா தாண்டவக்கோனே
தான தருமங்கள் எல்லாம் தாண்டவக்கோனே - இங்கு
வான வேடிக்கையானதே தாண்டவக்கோனே
மனித நேயம் இன்று தாண்டவக்கோனே
மண்ணுக்குள் புதைந்ததடா தணடவக்கோனே.
கூட்டுக்குடும்ப வாழ்க்கை தாண்டவக்கோனே - தனிக்
கூடாய் ஆச்சுதடா தாண்டவக்கோனே
போதும் என்ற மனம் தாண்டவக்கோனே - கொடும்
பொல்லாங்காய் மாறியதடா தாண்டவக்கோனே
சாமி பூசை பக்தியெல்லாம் தாண்டவக்கோனே - போலிச்
சாமியாரிடம் விழுந்ததடா தாண்டவக்கோனே
ஏமாற்றும் முதலைகள் தாண்டவக்கோனே - ஜனங்களை
ஏமாற்றி பிழைக்குதடா தாண்டவக்கோனே
கண்ணைத் திறந்து வையடா தாண்டவக்கோனே - உன்
திண்ணை பறிபோகும்டா தாண்டவக்கோனே
காலை ஆட்டிக் கொள்ளடா தாண்டவக்கோனே - பிணமென்று
தூக்கி எறிந்து விடும் தாண்டவக்கோனே

எழுதியவர் : ஜீவன் ( மகேந்திரன் ) (21-Sep-24, 9:52 pm)
சேர்த்தது : ஜீவன்
பார்வை : 45

மேலே