காதலில் பிரிவு

அவன் காதலனாய் என்னோடு
வாழ்ந்தவரை வாழ்க்கையே
வசந்தமாய் இனித்தது புது புது
ராகங்கள் பாடி, என் மனம்
வானம்பாடி போல இன்ப லோகம்
நோக்கி உயர உயர பறக்க
இன்று என்னை விட்டு விட்டு
போய்விட்டான் அவன் ......
காதல் எது என்று புரிந்தது இப்போது
கடந்த கால இன்ப ராக இசை
என் காதில் அபஸ்வரங்கள் இசைக்க
சுருதி இறங்கிய வீணை ஒலி போல

எழுதியவர் : வாசவன் -தமிழ்பித்தன் -வாசு (28-Jan-20, 7:04 pm)
Tanglish : kathalil pirivu
பார்வை : 93

மேலே