யாவும் எனக்கு நீயடி

காட்டுமுல்லைக் கொடியே கயல்நீந்தும் விழிக்குளமே
பாட்டின்குரல் சுவையே பண்பினிக்கும் பொன்ரதமே
பூட்டிய நெஞ்சினில் புகுந்துஎனைச் சாய்த்தவளே
பாட்டமாய் வருகுதடி பகலிலும் உன்நினைவு
சாட்டையடி தருகுதடி சயனத்தில் வரும்கனவு

அஷ்றப் அலி

எழுதியவர் : ala ali (30-Jan-20, 12:16 pm)
சேர்த்தது : அஷ்றப் அலி
பார்வை : 462

மேலே