நான்வரக் காண்கையில் நாணிடும் உன்முகம்

ஒருவிகற்ப நேரிசை வெண்பா
(ஏந்திசைச் செப்பல் ஓசை)

நான்காண வந்தாலும் நாணுகின்ற உன்முகந்தான்
மான்மறியாய் மாறுவதேன் மாட்சியுள்ள – வான்மதியே!
தேன்நிலவு செல்வோமே! தீந்தமிழை மாந்தியேநாம்
வான்புகழை எய்திடுவோம் வாழ்ந்து. 1

ஒருவிகற்ப நேரிசை வெண்பா
(தூங்கிசைச் செப்பல் ஓசை)

நான்வரக் காண்கையில் நாணிடும் உன்முகம்;
மான்மறி போலவே மாறுதே – வான்மதி!
தேன்நிலாச் சென்றுநாம் தீந்தமிழ் மாந்தியே
வான்புகழ் எய்துவோம் வாழ்ந்து. 2

ஒருவிகற்ப நேரிசை வெண்பா
(ஒழுகிசைச் செப்பல் ஓசை)

நான்காண வந்தாலும் நாணுகின்ற உன்முகம்
மான்மறியாய் மாறி மருகுவதேன்? – வான்மதியே!
தேன்நிலவு செல்வோமே! தீந்தமிழை மாந்திநாம்
வான்புகழ் எய்துவோம் வாழ்ந்து. 3

– வ.க.கன்னியப்பன்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (30-Jan-20, 12:56 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 170

மேலே