வெண்ணிலாயிங்கு ஏனோ விளம்பு
இரு விகற்ப நேரிசை வெண்பா
(ஒழுகிசைச் செப்பல் ஓசை)
அந்தியெழில் பொங்கிவரும் ஆனந்தப் பேரெழிலே!
சிந்தைதனில் செப்புவித்தை செய்திடும் - செந்தமிழ்ப்
பெண்ணழகே! புன்னகைப் பேரெழிலாய்ப் பூத்திருக்க
வெண்ணிலாயிங்(கு) ஏனோ விளம்பு!