கட்டிடமாய் எழுகிறதோ

புவியில் தோன்றிய
உயிர்கள் அனைத்தையும்
பெற்றவளைப் போல
பத்திரமா பாதுகாக்க
இயற்கை, வானத்தை
அன்னையாக்கி
தாய்ப்பாலென மழையைத்
தந்து காத்திட்ட
இயற்கையின் கருணைக்கு
ஈடு, இணையேது

காலம் மாறியது
காத்து வந்த இயற்கை
கண்டு கொள்ளாததால்,
குடிக்கும் நீருக்கும்
கையேந்த வைத்தது,
ஓடிய ஆறு படுக்க
விளை நிலம் கருக
உயிர் வாழ உழவன்
வயல்களையெல்லாம்
விற்று,பசிபோக்கினான்

கைமாறிய நிலம்
பயிரைத் தொலைத்து
பாலை வனமானது
கட்டிடம் ஒன்று
கம்பீரமாய் எழுந்தது
கண்ணுற்ற விவசாயி
கண் கலங்கினான்,
பசியால் வாடும் விவசாயி
பட்டினியால் சாவானென
கல்லறை ஒன்று
கட்டிடமாய் எழுகிறதோ !

எழுதியவர் : கோ. கணபதி. (2-Feb-20, 9:28 am)
பார்வை : 51

மேலே