உழவன் படும் பாடு
மண்ணோடும் வெய்யிலோடும்
நீரோடும் சேறோடும் தினம் தினம்
எத்தனை எத்தனை போராட்டம் ஆனாலும்
உழவனின் கண்களில் இன்னமும் வற்றாத நீரோட்டம்
விதைத்து விதைத்து உழைத்து உழைத்து
சிதைந்துப் போனதுதான் மிச்சம்
உழவனின் வாழ்க்கையில் இன்னமும்
தோன்றவேயில்லை ஒரு அதிர்ஷ்ட மச்சம்…
யாரிட்ட சாபம் இது
உலகுக்கு சோறிட்டவனுக்கே சோறில்லை
விளை நிலங்களெல்லாம் விலை நிலங்கள்
மடிக்கணினியை மட்டும் கவனிக்கும் கணவான்களே
சற்று மண்வெட்டியையும் கவனியுங்கள்…
வேண்டும் அதிநவீன தீயணைப்பு வாகனம்
வீட்டில் இல்லை தீ... ஊரிலும் இல்லை தீ
உழவனின் வயிற்றில் தீ
அணையுங்கள் அதை இப்போதே... தவறினால்
நாளை அது உலகையே அழித்துவிடும்...
.
கவிஞர் செல்வமுத்து மன்னார்ராஜ்
.