காதல் ♥️♥️

காதல்💓

உன் முதல் பார்வையிலேயே முன்னூறு கவிதை எழுத வைத்த இனியவளே. இதயத்தில் குடி புகுந்த தேவதையே.
மயக்கம் கண்களால் மாயம் செய்யும் விந்தையே.
இனிக்கும் தேன் சிந்தும் இதழாளே.
மணக்கும் மேனியை சின்ன இடை கொண்டு தாங்குபவளே.
இளவேனில் காலத்து இளந்தென்றலே.
பவள வாய் திறந்து முத்து வரிசை கொண்டு முல்லை பூ போல் சிரிப்பவளே.
இன்பமதை இயன்றவரை அமுதமென சுமந்து வரும் இன்ப சுரங்கமே.
குயிலின் குரல் கொண்டவளே.
மயிலென நடனம் பியல்பவளே.

மங்கையே உன் மாதுளை இதழ் மடல் மலர்ந்து நம் காதலை சொல்லிவிடு.
காதலை கன்னியமுடன் செய்வோம்.
பல கவிதை எழுதி காவியம் படைப்போம்.
இன்னும் என்ன யோசனை,
காலத்தை கடத்த வேண்டாம்.
இளமை வானவில் என தோன்றி மறைந்துவிடும்.
மின்னலென பளிச்சிட்டு
போய்விடும்.
கோடை மழை என தீடிரென கொட்டி தீர்த்து விட்டு சென்று விடும்.
கண்ணே கால் கடுக்க நிற்கிறேன்.
காத்திருந்த கண்கள் சோர்ந்து போகும் முன்,
காதலை கூறி விடு.
காதலே காதலை காதலித்துவிடு.

- பாலு.

எழுதியவர் : பாலு (2-Feb-20, 11:49 am)
சேர்த்தது : balu
பார்வை : 352

மேலே