காமப் பேய்

காமப் பேய்
°°°°°°°°°°°°°°°
கதவடைத்துப்
போர்த்திய இருட்டில்
கண் விழித்ததொரு
காமப் பேய்

விழிகளில் எரியும்
தீயில்
வெளிச்சமானது
வீதியின் வெளி

வெளிக் கிழம்பிய
பேய்
முன்னதாக
கடந்த பகலில்

குளக்கரையினிலும்
புழக்கடைகளிலும்
மாந்தோப்பிலும்
மற்றும் வயல்
வெளிகளிலும்

கண்ட கிழத்திகளின்

முகம்
கை கால் தொடை
முலை மற்றும்
காமக்குறியென
அணைத்தையும்
ஒன்று திரட்டி

புதிதானதோர்
பெண் பேய்
சமைத்தது

பசியணைத்தையும்
அதன்
யோனிக் கடலில்
பிண்டம்
கரைத்த பின்பும்

பித்ருவாகவே
அலைகிறது
காமம் மட்டும் ...

எழுதியவர் : முகிலன் (2-Feb-20, 2:03 pm)
சேர்த்தது : முகிலன்
Tanglish : kaamap pei
பார்வை : 129

மேலே