தந்தைக்கு தான் இயற்றிய பிறந்தநாள் வாழ்த்து மடல்
திரை கதாநாயகர்களை கொண்டாடிய நான்,
நிஜ கதாநாயகனை காலம் போக்கி (போக) தான் கண்டுணர்ந்தேன்- அப்பா
தியாகச்செம்மல் ஈன்ற தரணியனே -
சம்மட்டியால் இடியுண்டாலும், கேடயமாய் எம்மை காத்தவரே.
காவல்துறையில் பட்டொளி வீசி பறந்தவனே -
எங்களின் விடியலுக்கு சுயஉலகை தீக்கிரையாக்கியவரே.
தொட்டதெல்லாம் வெற்றிமகுடம் சூடியவனே -
மதிநுட்பம் ,மனிதம் இரண்டும் கண் என போதித்த மன்னவனே.
உற்றார்,உறவினர் அன்றி ஊராரும் போற்றும் புதல்வனே -
எம் காட்டில் வசந்தம் வீச, பல புயல்களை தாண்டி நிற்பவரே.
நேயத்தோடு பலரின் நிலை ஏற்றம் பெறசெய்தவனே -
தூக்கி கொஞ்சாமல் ,நாங்கள் தலை தூக்க வாஞ்சை கொள்பவரே.
சுமைதாங்கும் கல் சலித்தாலும், நீ சலிக்காமல் இமைப்போல எங்களை தாங்குகிறீரே.
உங்கள் அருள் புரயவில்லையென்றாலும்,
எங்களுக்கு பொருள் சேர்ப்பதே திருபணியாய் என்னியவரே.
எம் வாழ்வியலை மெருகேற்ற ஓய்வின்றி உருகியவரே.
யாம் கரைசேர கலங்கரை விளக்கமாக சுழல்பவரே.
பாசம்,நேசம் இருந்தும் வெளிப்படுத்தாது வெதும்பி நிற்பவரே.
தீமை உனை தீண்டி கருக்கியபோதும் மீண்டு வந்த பீனிக்ஸ் பறவையே.
தாய்க்கு தலைமகன் நீ..தாய் மண்ணுக்கு பெரிய தலைகட்டு நீ...நம் குலத்திற்கு குருசாமி நீ.
சொல்லி முடிக்க வார்த்தைகள் பத்தாது என தெரிந்தும் சொல்லிகொன்டிருப்பதுபோல்,
கண்டிப்பு,கடமை,கருணை மூன்றில் அடைக்க முயல்கிறேன் முடியாது என அறிந்தும்.
திராவிட கொள்கையால் நாட்டை நலமாய் ஆண்டவர் அறிஞர் அண்ணா-துரை,
திராவிடச்செல்வன் இயற்பெயர் பெற்ற நீ வீட்டை செழுமையாய் ஆளுவாய் என அறிந்தே அண்ணாதுரை என பெயர் மாற்றம் பெற்றாயோ????
மணிவேல் எனும் மா-மரத்தை விதைத்த ஆலமரத்திற்கு🙏.
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!!
-manivel அண்ணாதுரை.
வாழ்க பலகோடி நூறாண்டு😍