நட்சத்திரங்கள்

நட்சத்திரங்கள் !
பூமியில் தூவிய
விதைகள்
மண்ணில் விழுமுன்
சூரியனின் அழகில் மயங்கி
வானத்திலேயே நின்று விட்டன.

இரவு வந்தால் போதும்
பாதுகாவலுக்கு
சந்திரன் நிற்பதால்
வீசப்பட்ட விதைகள்
இவனை ஏமாற்றிய
மகிழ்ச்சியில் கண்ணை
சிமிட்டி சிரிக்கிறது

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (4-Feb-20, 12:07 pm)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
Tanglish : natchathirangal
பார்வை : 221

மேலே