எத்தனை, எத்தனை மனிதர்கள்

எத்தனை மனிதர்கள் 😎

வேடிக்கையான உலகம்
விந்தையான மனிதர்கள்
அவரவர் எண்ணம் போல் வாழ்க்கை
சிலர் சுதந்திர பறவைகளாக
செக்கிழுத்த செம்மலாக பலர்
வானம்பாடியாக சிலர்
தேனியாக பலர்
உண்மையில் சிரிப்பவர் சிலர்
சிரிப்பை கூட முகமூடி அனிந்து சிரிப்பவர் பலர்
வினாடியை நேசிப்பவர் சிலர்
நாளை, நாளை என்று ஏங்கும் பலர்
ரசனை மிகுந்தவர் சிலர்
இயந்திரம் வாழ்க்கை வாழ்பவர் பலர்
தன்னை நேசிப்பவர் சிலர்
பணத்தையும், பொருளையும் நேசிப்பவர் பலர்
காலத்தை வென்றவர் சிலர்
கூட்டத்தோடு கூட்டமாக காணாமல் போனவர் பலர்
சகமனிதனை நேசிப்பவர் சிலர்
சுயநலத்தில் மேதை பட்டம் பெற்ற பலர்
வாழ்க்கையை அறிவால் வென்றவர் சிலர்
அதை மூடநம்பிக்கையை நம்பி வாழ்கையில் தோற்றவர் பலர்
- பாலு.

எழுதியவர் : பாலு (8-Feb-20, 8:09 pm)
சேர்த்தது : balu
பார்வை : 145

மேலே