வெற்றி
வெற்றி
திட்டம் தீட்டி உழைத்தவர்
காலில் விழுக தவித்திடும்
மட்டம் போட்ட மாணவர்
பக்கம் விட்டே ஓடிடும்
அல்லும் பகலும் படித்தவர்
அருகில் வந்து நின்றிடும்
துள்ளும் மகிழ்ச்சி பொங்கவே
வெற்றி மாலை சூட்டிடும்
தோல்வி என்பது முடிவல்ல
வெற்றி மட்டுமே வாழ்வல்ல
தோல்வி ஓட உழைக்கணும்
வேள்வி போல படிக்கணும்
விதையை வைத்தால் பலனுண்டு
வெயில் காலத்தில் நிழலுண்டு
பசியை அடக்க கனியுண்டு
விதைக்கு நீராய் உழைப்பைத்தா