வாழப் பிறந்தவன்
உறையில் உள்ளமட்டும் வாள்,
உணர்வில் திரண்டு விட்டால் மிரள் ,
களத்தில் இறங்கினால் வீழ்,
கணத்தில் சாய்க்கும் அது புரள்,
மன்னர் வரிசையில் வெற்றிச் சின்னம் வாள்
மனித வரலாற்றில் அது நச்சு கத்தி
அதற்கும் படை பெயர் உண்டு, வாள்படை.
வாள் எடுத்து வீழ்த்தியவனும் உண்டு
வெல்வதில் சரித்திரம் படைத்தவனும் உண்டு
எதற்கும் அஞ்சாதான் வாள் கொண்டோன்
இவன் தோள் வலிமை பெறுவதும் வாளால்
வாழ்வதும் வீழ்வதும் வையகத்தில்
வீரரின் படைதனில் சாதனையே
ஆனால் மனித நேயம் என்பதும் வாள்தான்
சிந்தனை செய் மனித நேயம் வெல்லும்
அழிக்க அல்ல , ஆள அல்ல, வாழப் பிறந்தவன் மனிதன் ...