வாழ்வோம் வா

வெயில் மாலைப்பொழுதில்
இருள்சூழலாம்
இளவேனில் துவங்க
இலை வீழலாம்
முழுநிலவும் திரிந்து
தேய் பிறையாகலாம்
இவையாவும் இயல்பில் வரும்போகுமே
இதனாலே சோகம் ஏன்நெஞ்சமேjQuery17108069996733774323_1581261112860
மேடுபள்ளம் இருந்தால்
தான் பாதையே
இன்பதுன்பமிரண்டும்
தான் வாழ்க்கையே
வாழ்வதன்போக்கில் நாம்
வாழலாம்
வருவது என்னதான்
பார்க்கலாம்
கரம்கோர்த்து நடப்போம் வா...

Rafiq

எழுதியவர் : Rafiq (9-Feb-20, 8:38 pm)
சேர்த்தது : Rafiq
Tanglish : vaazhvom vaa
பார்வை : 1557

மேலே