மேகதூது

மேகதூது

மலையெல்லாம் கவினிழந்து நிலைமாறி நிற்க ....

காடெல்லாம் வளங்குன்றி
பீடழிந்து கிடக்க...

வயலெல்லாம் பசுமை இழந்து
காய்ந்தே தான் கருக...

கடலும் கூட உன் வரவின்றி
வாடித்தான் வற்ற...

உனைக்கண்டு நாளாச்சு..
நிலங்களெல்லாம் பாழாச்சு..

உருவாகவே மறந்தாயோ?
உருவாகிப்பின் மறைந்தாயோ?

காற்று
உனைக் கடத்தியதோ?
உனைத் தவறாக
வழிநடத்தியதோ?

நீ மாயையின் தங்கையோ?மாயமாகி
சென்றது தான் எங்கேயோ?


தூதாக நீ சென்றகாலம் எல்லாம்
மலையேறியது மேகமே..

உனைக்காண உனக்கான
ஒரு தூதை
அனுப்பும் நிலையானது சோகமே...

எழுதியவர் : Usharanikannabiran (10-Feb-20, 10:19 am)
சேர்த்தது : usharanikannabiran
பார்வை : 92

மேலே