தமிழா எழுச்சி கொள் தமிழா விழித்து கொள்

தமிழா! எழுச்சி கொள்!
தமிழா! விழித்து கொள்!

தமிழன் என்று ஒரு இனம் உண்டு
தனியே அவர்க்கொரு குணமுண்டு.

தமிழுக்கு இலக்கணம் வகுத்த தொல்காப்பியன் உன் தலைவன்.

திருக்குறள் எழுதிய வான் புகழ் வள்ளுவன் உன் தலைவன்.

ஜீவகாருணயத்தை உலகுக்கு எடுத்துரைத்த அருட்செல்வர் வள்ளலார் உன் தலைவன்.

பகுத்தறிவு பகலவன்
தீண்டாமை எதிர்ப்பு,
பெண் விடுதலை என தன் இறுதி மூச்சு உள்ளவரை குரல் எழுப்பிய
தந்தை பெரியார் உன் தலைவன்.

அதிகார அரசியலை தன் பேச்சாற்றலால் அடித்து நொறுக்கி
பட்டி தொட்டியேங்கும்
அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தி திராவிட அரசியலை நிலைநாட்டிய அறிஞர் அண்ணா உன் தலைவன்.

கல்வி கண் திறக்க
பல பள்ளிகள் திறந்து
ஏழை குழந்தை அவர்களுக்கு மத்திய வேளை உணவு வழங்கி
கல்வி புரட்சி ஏற்படுத்திய
வரலாறு படைத்த
கரை படாத கரம்
காமராஜ் உன் தலைவன்

நீ சோற்றில் கை வைக்க
தினம் சேற்றில் இரங்கும் உயர்வான உழவு தொழில் செய்யும்
ஒவ்வொரு விவசாயும் உன் தலைவன்

வாழ்க்கையில் முன்னேற
கனவு கானுங்கள் என்று ஒவ்வொரு இளைஞனை பார்த்து பறைசாற்றிய ஐய்யா அப்துல்கலாம் உன் தலைவன்.

வசனம் என்ற பெயரில்
பல ஆண்டுகளாக
தமிழை பலவாறாக கொலை செய்யும்
கதாநாயகன் உன் தலைவனா?
சினிமா என்ற போர்வையில்
கலை சேவை செய்வதாக கூறிக்கொண்டு
வன்முறையை கட்டவிழ்த்து
இளைஞன் மனதை கெடுக்கும் அந்த ஏட்டு சுரக்காய்,
காகித பூ உங்கள் தலைவனா?

யாரோ கொள்ளை அடித்த கருப்பு பணத்தை
வெள்ளையாக்க
சினிமா என்ற உண்ணத கருவியை பயன்படுத்தி
தவறுக்கு துனை போகும் அந்த கதாநாயகன் உன் தலைவனா?

தமிழா! இயல், இசை, நாடகம் என்ற மூன்று தமிழ் வழி வந்தவன் நீ.
அண்டத்தில் உள்ளதே பிண்டம்
பிண்டத்தில் உள்ளதே அண்டம்
என்ற ஆராய்ச்சியை தன் தவத்தின் மூலம் அறிந்து பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உலககிற்கு எடுத்து சொன்ன சித்தர் வழி வந்த பரம்பரை நீ.
சில அன்னிய மொழியின் ஆதிக்கத்தால் அடையாளம்
இழந்தாய் நீ.

சுயலாபதுக்காக
கலை என்ற பெயரில்
கலாச்சார சீரழிவு செய்யும் சாயம் பூசி நடிக்கும் நிழல் நாயகர்களை ஒரு போதும் நம்பாதே.

இனி ஒரு விதி செய்
தமிழா ஒரு போதும் தாழ்ந்து போகாதே
நெஞ்சம் நிமிர்ந்து நட
வீரம் உன் ரத்தத்தில் உள்ளது
மறந்து விடாதே
மூவேந்தர் முகவரி உன்னுடையது
தமிழா! எழுச்சி கொள்
தமிழா! விழித்து கொள்
தமிழா! வா களத்தில் இரங்கு
தரணி ஆளப்போவது நீ தான்.
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா!

- பாலு.

- பாலு.

எழுதியவர் : பாலு (8-Feb-20, 8:21 pm)
சேர்த்தது : balu
பார்வை : 1607

மேலே