நினைவுகள்
முத்தான அந்த மூன்று வயதினில்
அழுகை என்னுள் தொற்றிய போதெல்லாம்..- கண்ணே மணியே
என்றெனைக் கூறி..-பூ
மார்பினை மொத்தையெனக் கொண்டு
என்னை உறங்க வைத்தாள் அன்னை..
அந்த கபடமற்ற பருவத்தை- மறு முறை
எட்டிப்பார்க்க ஆசை..
வாகனம் ஏறா வயதினில்
உறவுகளை பார்க்கலாம்..வா..
என்று எனை அழைக்கும் போது
உள்ளம் பொங்கும் - அந்த
ஓர் தருணத்தை -மறு முறை
எட்டிப்பார்க்க ஆசை..
எண்ணெயால் தலையினை அபிஷேகித்து.-பாதம் வரை நீளும்
புத்தக பையினை ஏந்தி..
பள்ளி ஓர் பாலைவனம் என்று
குடிநீரை இன்னோர் கையில் ஏந்தி
நண்பனுடன் நகைத்து பயணித்த
அந்த அழகிய நாட்களை- மறு முறை
எட்டிப்பார்க்க ஆசை..
பாடம் முடிந்த வகுப்பறையில்
கதிரவனைப் போல் வட்டமிட்டு
அன்னங்களை பகிர்ந்து உண்டும்..
நிலவு ஓளியில்..கூட்டுச் சேர்ந்து..
சிட்டுப்போல் விளையாடியதும்..
என்றும் நினைவில் நீங்காத
அந்த நாட்களை - மறு முறை
எட்டிப்பார்க்க ஆசை..
இறைவனே..
வரம் ஒன்று தாராய்..
இன்றே நான் பாலகனாகி..
மாண்டுப்போன அந்த நாட்களை
மீண்டும் ஓர் முறை..
ஆசையாய் எட்டிப் பார்பதற்கு..